ராமதாஸை சேர்க்கக்கூடாது!.. கண்டிஷன் போட்டு கூட்டணி வைத்த அன்புமணி?...
கடந்த பல மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி, ராமதாஸ் என பிரிந்து இரண்டு பிளவாக செயல்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாகவே மருத்துவர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி பற்றி பல புகார்களை தொடர்ந்து செய்திகளிடமும், பாமக கூட்டங்களிலும் பேசி வருகிறார்.
என் மகன் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறான். யாரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் அவனிடம் இல்லை. தாயை அடிக்க வந்தான்.. அவனை மத்திய அமைச்சராகியது நான் செய்த மிகப்பெரிய தவறு.. என் மார்பிலே குத்திவிட்டான்.. என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து விட்டான்.. என்றெல்லாம் பரபரப்பு புகார்களை சொன்னார் மருத்துவர் ராமதாஸ்.
அதோடு பாமகவுக்கு நான்தான் தலைவர்.. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்து விட்டது என்றெல்லாம் அறிவித்தார். ஆனால் பாமகவுக்கு நான்தான் தலைவர் என அன்புமணி தொடர்ந்து சொல்லி வருகிறார். அதேபோல் மருத்துவர் ராமதாஸின் புகாருக்கு அன்புமணி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில்தான், இன்று காலை சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வந்த அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்தார்.
அதன்பின் செய்தியாளிடம் பேசிய போது அதிமுக கூட்டணியில் பாமகவும் இணைகிறது என இருவரும் கூட்டாக அறிவித்தனர். மேலும் தொகுதிகளில் நான் எவ்வளவு தொகுதி என முடிவு செய்துவிட்டோம்.. ஆனால் பின்னர் அறிவிப்போம் என கூறியிருக்கிறார்கள். 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தபோது 23 தொகுதிகளில் போட்டியிட்டனர். ஆனால், இந்தமுறை பாமகவிற்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் ராமதாஸ் இந்த கூட்டணியில் சேரக்கூடாது என்று கண்டிஷன் போட்டுதான் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
அதேபோல் இந்த கூட்டணி உறுதியானதும் இதுபற்றி கருத்து தெரிவித்த ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகிகள் அன்புமணி இருக்கும் கூட்டணியில் நாங்கள் இணைய மாட்டோம் என அறிவித்திருக்கிறார்கள்.