அதிமுக கூட்டணியில் பாமக!.. பழனிச்சாமி - அன்புமணி அறிவிப்பு.. எவ்வளவு தொகுதி?..
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. குறிப்பாக யாருடன் யார் கூட்டணி அமைப்பார் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும் மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அறிவித்துவிட்டது.
இந்த கூட்டணியில் எந்த கட்சிகளெல்லாம் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு அன்புமணி ராமதாஸ் வந்தார். அவர்கள் சில நிமிடங்கள் பேசினார். அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி உறுதி செய்தார். மேலும் அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இணைந்திருக்கிறது. இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியுடன் இணையும். நாங்கள் தேனீக்கள் போல எறும்புகள் போல சுறுசுறுப்பாக வேலை பார்த்து 234 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.
பாமக கழக நிர்வாகிகள் விரும்பியதுபடி அதிமுக நிர்வாகிகள் விரும்பியது படி இந்த கூட்டணி அமைந்திருக்கிறது. இது இயல்பான கூட்டணி வெற்றி கூட்டணி என அறிவித்தார் அறிவித்திருக்கிறார் பழனிச்சாமி. மேலும், பாமகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை பின்னர் அறிவிப்போம் என அவர் கூறினார். அனேகமாக பாமகவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். எனவே, அவரின் அறிவுறுத்தலால்தான் இந்த கூட்டணி அமைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.