இன்று ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்தது வெள்ளி.. தங்கம் விலையும் உச்சம்..!
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 12,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ. 2,83,000 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,02,960-க்கு விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 2,160 வரை உயர்ந்துள்ளது நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகளாவிய அரசியல் சூழல்கள், குறிப்பாக வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் சர்வதேசப் போர் பதற்றங்கள் முதலீட்டாளர்களை தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி திருப்பியுள்ளன.
பங்குச்சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மீது அதிகப் பணம் குவிந்து வருகிறது. இத்தகைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் நீடிக்கும் வரை, விலையேற்றம் மேலும் தொடர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
Edited by Mahendran