1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. All schools will operate as normal from tomorrow

ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும்

schools
தனியார் பள்ளிகள் நாளை முதல் இயங்காது என போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தனியார் பள்ளிகள்  அறிவித்துள்ளன. 
 
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடப்பட்டதை கண்டித்து நாளை முதல் தனியார் மெட்ரிக் நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் இயங்காது என தனியார் பள்ளிகள் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நாளை முதல் வழக்கம் போல் அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கிரிப்டோகரன்சிக்களை தடை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்