செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (08:38 IST)

+2 தேர்வு விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்பம்! – முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் +2 தேர்வில் மறுகூட்டலுக்கு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் +2 பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி படிப்பிற்காக விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அதேசமயம் சில மாணவர்கள் மறுகூட்டலுக்காக விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “+2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் தங்களது விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்ய வேண்டும்.

விடைத்தாள் பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15 முதல் 19ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்குள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.