1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (08:10 IST)

தனியார் பள்ளிகள் இன்று இயங்கும்: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவி

matriculation
கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையை கண்டித்து அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று இயங்கும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது
 
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று வழக்கம்போல் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று இயங்க வேண்டும் என்றும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்
 
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது