கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் அந்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்