செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (08:09 IST)

கனமழை எதிரொலி: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

schools
கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
கடந்த இரண்டு நாட்களாக நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது என்பதும் அதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கன மழை காரணமாக நேற்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
நீலகிரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மேலும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு பொது மக்கள் வெளியேற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.