தொடர்புடைய செய்திகள்
- செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த 4 நிபந்தனைகள்: என்.ஆர்.இளங்கோ விளக்கம்..!
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்: உச்சநீதிமன்றம் உத்தரவு..!
- முடிவுக்கு வருமா சிறைவாசம்? இன்று வெளியாகிறது செந்தில் பாலாஜி ஜாமின் மனு தீர்ப்பு..!
- அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றம்.! துரைமுருகனுக்கு ஏமாற்றம் - தமிழிசை..!!
- உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி; ஏமாற்றம் இருக்காது! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
செந்தில் பாலாஜி விடுதலை: அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர், அமைச்சர்கள் நீக்கம்?
ஒரு ஆண்டுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, அவர் இன்று மாலைக்குள் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி விடுதலை ஆகி வெளியே வந்தவுடன், அவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்படும் என்றும், இதனை அடுத்து, அவர் மின்சாரத்துறை உள்பட சில துறைகளின் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவை பதவி வழங்கும் போது, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது, செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படுவதோடு, இரு அமைச்சர்களின் பதவிகள் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுவது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில், அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
