அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றம்.! துரைமுருகனுக்கு ஏமாற்றம் - தமிழிசை..!!
அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என தெரிவித்தார். இதன்மூலம் அமைச்சரவை மாற்றம் நடக்கப்போவது உறுதியாகியுள்ளது. முதல்வரின் பேட்டி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், யார் ஏமாற போகின்றனர் என்பது அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்று கூறியுள்ளார். முதல்வர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.