வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (11:36 IST)

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி; ஏமாற்றம் இருக்காது! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

Stalin

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

 

 

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் நடைபெற உள்ளதாகவும், முக்கியமாக திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே பேசிக் கொள்ளப்படுகிறது. 

 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வந்த பின் திமுக பவள விழா நிகழ்வில் இதுகுறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் அறிவிப்பு வராவிட்டாலும் அது தொடர்பாக திமுக கட்சிக்குள் பல்வேறு சந்திப்புகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் புதிய பள்ளி ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K