முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்: உச்சநீதிமன்றம் உத்தரவு..!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு மீது விசாரணை முடிவுக்கு வந்தது, மற்றும் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சற்று முன், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, இந்த உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் வெளியே வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran