வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (11:27 IST)

செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த 4 நிபந்தனைகள்: என்.ஆர்.இளங்கோ விளக்கம்..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில், நான்கு நிபந்தனைகள் விதித்துள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக ஒருவரை விசாரணைக் கைதியாக வைத்திருப்பது மனித உரிமை   மீறலாகும். எனவே, உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதாக என்.ஆர். இளங்கோ அவர்கள் தெரிவித்தார்.

மேலும், உச்சநீதிமன்றம் ஜாமீனுக்கு விதித்த நிபந்தனைகளாக 25 லட்சம் ரூபாய்க்கு இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வந்து ஆஜராக வேண்டும், வழக்கின் அனைத்து விசாரணைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும், தேவையில்லாமல் வழக்குகள் ஒத்திவைக்க  கூடாது, மற்றும் சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று நான்கு நிபந்தனைகளை விதித்து ஜாமீன் அளித்துள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜாமீனில் செந்தில் பாலாஜி விடுதலை ஆன பிறகு, அவர் மீண்டும் அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva