தொடர்புடைய செய்திகள்
- பாஜக-வின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- அண்ணாமலை கத்துக்குட்டியா? செல்லூர் ராஜூ கத்துக்குட்டியா ? என்பது மக்களுக்குத் தெரியும் - கரு. நாகராஜன்
- அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும்; செல்லூர் ராஜூ
- மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது: அன்புமணி கோரிக்கை..!
- அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கு தெரியும்: ஜெயகுமார் எச்சரிக்கை..!
அதிமுக மதுரை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு? ஈபிஎஸ் ஆலோசனை..!
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைக்க எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தென் மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று கூறப்படும் நிலையில் அதை பொய்ப்பிக்கும் வகையில் தான் மதுரையில் மாநாடு நடத்தப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியேற்ற பின் தென் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைக்கலாமா என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிமுக நிர்வாகிகள் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க அதிமுகவினர் நடத்தும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran
