வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 5 ஆகஸ்ட் 2023 (16:42 IST)

பாஜக-வின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udayanithi stalin
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘’எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று  கூறியிருந்த நிலையில்,  இதற்கு அமைச்சர் உதயநிதி ‘’இதை ஒருபோதும் ஏற்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு அவ்வப்போது  மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி வரும் நிலையில் பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘’எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று  கூறியிருந்தார்.

இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷா- வின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.

தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “Local Language" என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.