1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sellur Raju says about annamalai

அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும்; செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும், அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்துவதில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா முக்கியம் என்றேன். 
 
நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். 
 
ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன். அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன். 
 
இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல-முதல்வர் மு.க.ஸ்டாலின்