வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:58 IST)

அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கு தெரியும்: ஜெயகுமார் எச்சரிக்கை..!

அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கு தெரியும் என்றும் அதிமுகவின் தொண்டனையோ தலைவனையோ விமர்சனம் செய்தால் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் இந்த நிலைக்கு அண்ணாமலை செல்ல மாட்டார் என நம்புகிறோம் என்றும் அந்த நம்பிக்கையை அவர் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.  
 
கடந்த சில மாதங்களாகவே அதிமுக தலைவர்களும் பாஜக தலைவர்களும் காரசாரமாக எதிர் கருத்துக்களை கூறி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran