திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:01 IST)

அண்ணாமலை கத்துக்குட்டியா? செல்லூர் ராஜூ கத்துக்குட்டியா ? என்பது மக்களுக்குத் தெரியும் - கரு. நாகராஜன்

Karu.Nagarajan
அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள நிலையில் இதற்கு கரு. நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன்’’ என்று அறிக்கை வெளியிட்டதற்கு,  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘’அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார்’’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக  துணைத்தலைவர் கரு. நாகராஜன், செல்லூர் ராஜூ'', இவ்வளவு நாட்கள் எப்படி அமைச்சராக இருந்தார் என்பது விநோதமாக உள்ளது. செல்லூர் ராஜூ இதுபோன்ற பேச்சுகளை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலை கத்துக்குட்டியா? செல்லூர் ராஜூ கத்துக்குட்டியா ? என்பது மக்களுக்குத் தெரியும் ''என்று கூறியுள்ளார்.

கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக தலைவர்கள் இடையே இப்படி மாறி மாறி விமர்சிப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.