1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK Byelection meeting continues for 2nd day

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2 வது நாளாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை!!

உள்ளாட்சி தேர்தல்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2 வது நாளாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளன.  
 
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிமுக ஆலோசனை நடத்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை நேற்று நடந்தது. 
 
இதனிடையே 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2 வது நாளாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
About Writer
Sugapriya Prakash