வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (15:58 IST)

உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடக்கம் !

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்  தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என கேள்வி எழுந்தது.

இதுகுறித்து சமீபத்தில்  அமைச்சர் பெரியகருப்பன் ,செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தவில்லை என தெரிவித்து அதிமுக மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இன்று முதல், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் வாக்களர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.