திமுக மிரட்டியதால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை!.. ஆதவ் அர்ஜுனா காட்டம்!..
நடிகர் ரஜினி பாட்ஷா பட விழாவில் அப்போதைய முதல் ஜெயலலிதாவுக்கு பேசினார். அந்த சம்பவம் ரஜினியை அரசியலுக்கு இழுத்தது. அரசியலுக்கு வருவதாக முடிவெடுத்த ரஜினி தொடர்ந்து தனது திரைப்படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களை பேசி வந்தார். மேலும் ஆண்டவன் எப்போது சொல்லுகிறானோ அப்போது நான் அரசியலுக்கு வருவேன் என தொடர்ந்து பன்ச் வசனம் பேசி வந்தார்.அப்படியே 25 வருடங்கள் போய்விட்டது..
அரசியலுக்கு வரப்போவதாகவும், ஆன்மீக அரசியல் செய்யப் போகிறேன் எனவும் அறிவித்தார் ரஜினி.. அரசியல் தொடர்பான வேலைகள் சூடு பிடித்தது.. ஆனால் திடீரென்று தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி துவங்குவதிலிருந்து ரஜினி விலகினார். ரஜினியை பாஜக இயக்குவதாக அப்போது செய்திகள் வெளியானது., ஏனெனில் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும், பாஜக தலைவர்களுக்கும் நெருக்கமானவராக ரஜினி இருந்தார்.
இந்நிலையில், தவெகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா ஒரு விழாவில் பேசும்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவில் இருந்தார்.. அவரை திமுக மிரட்டியது. திமுகவின் மிரட்டலால்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை. இப்போது திமுகவுக்கு எதிராக விஜய் நிற்கிறார்.. திமுகவின் மிரட்டலை கண்டு அவர் பயப்படவில்லை என்றால் அவருக்கு மனவலிமை அதிகம் என பேசினார்.