1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. josh charles martin warning tvk vijay

உங்க குடும்பத்தையும் பிரிச்சிருவாரு!.. விஜயை எச்சரிக்கும் ஆதவ் அர்ஜுனா மைத்துனர்!...

adhav arjuna
நடிகர் விஜய் அரசியல்வாதியான பின் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஒவ்வொருவரும் சனிக்கிழமை சுறுசுறுப்பாக ஒவ்வொரு மாதத்திற்கும் சென்று திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேசி வந்தார் விஜய். அப்படி அவர் கரூருக்கு சென்றிருந்தபோது அசம்பாவிதம் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். அது விஜயை மனரீதியாக முடக்கப்பட்டது.. அந்த சம்பவம் நடந்த மூன்று நாட்கள் விஜய் வெளியே வரவில்லை.. சில மாதங்கள் கழித்துதான் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்.

கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் அதற்கு காரணம் என பலரும் சொன்னார்கள்.. இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்றார் விஜய். தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். ஒருபக்கம் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்..

அதோடு விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கிடையில்தான் தவெக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது.. இந்நிலையில் தவெகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விஜய்க்கு ஒரு அறிவுரையை கூறியிருக்கிறார்..

josh charles
ஆதவ் அர்ஜுனா என் குடும்பத்தை பிரிக்க முயற்சி செய்தது போலவே உங்கள் குடும்பத்தையும், அரசியலையும் சிதைக்க தயங்க மாட்டார். ஒரு நலவிரும்பியாக உங்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.. கூடவே இருந்து குழிப்பறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காண தவறினால் உங்கள் வெற்றி பாதியிலேயே முடங்கி போகும் அபாயம் உண்டு’ என எச்சரித்திருக்கிறார். இந்த
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சமீபத்தில் லட்சிய ஜனநாயக கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கியது குறிப்பிடத்தக்கது..
அடுத்த கட்டுரையில்
சங்கீதாவுக்கு எவ்வளவு சொத்து?.. விஜயின் வேட்புமனுவை நிரப்புவதில் சிக்கல்?!..