1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna challange dmk on local election

அவமானப்படுத்துறீங்களா!. ஒரு மேயர் ஜெயிச்சு காட்டுங்க!.. திமுகவுக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!..

adhav arjuna
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியில் நடைபெற்று வருகிறது. இப்படி ஒரு தோல்வியை சந்திப்போம் என திமுக எதிர்பார்க்கவில்லை. எனவே, தவெகவின் செயல்பாடுகளை அந்த கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
 
சமீபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் விஜயையும், தவெகவையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.  ஒருபக்கம் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் நடந்த ஒரு விழாவில் தவெக எம்.எல்.ஏ பல்லவி கலந்து கொண்ட போது அவரை அவமதிக்கும் வகையில் சென்னை மேயர் பிரியா விளக்கேற்ற மெழுகுவர்த்தியை அவரிடம் கொடுக்காமல் வேறு ஒருவரிடம் கொடுத்து அவமானப்படுத்தினார்.
 
இதனால் பல்லவி அங்கிருந்து கோபமாக வெளியேறினார். இந்நிலையில் நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜனா ‘எங்கள் எம்.எல்.ஏவை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.,  உதயநிதிக்கு நான் சவால் விடுகிறேன். இன்னும் 8 மாதத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் பதவியை கூட நீங்கள் பெற முடியாது..  அதுவும், தவெக பெண் எம்.எல்.ஏ அவமதிக்கப்பட்ட சென்னையில் திமுக டெபாசிட் கூட வாங்காது’ என ஆவேசமாக பேசியிருக்கிறார்.
 
அடுத்த கட்டுரையில்
ஆட்சிக்கு வந்துட்டோம்னு மிரட்டுறீங்களா?!.. செங்கோட்டையனிடம் கோபப்பட்ட பத்திரிக்கையாளர்கள்!..