கரூரில் விஜய் பிரச்சாரம்!.. இடைத்தேர்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!..
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார்.
அதேபோல் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜய பாஸ்கர் ஆகியோர் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். எனவே, தற்போது 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கிறது. விரைவில் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த தலைமை நீதிபதிகள் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக மத்திய அரசு, முதலமைச்சர் விஜய் மற்றும் சட்டசபை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு சென்ற போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் இடைத்தேர்தலுக்கு தடை வந்திருக்கிறது.