1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor ranjith comment about tvk vijay government

பல வருஷமா ஆட்சியில இருந்தவங்களை கேட்கல!. விஜயை மட்டும் ஏன் கேட்குறீங்க?..

ranjith vijay
நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து 75 நாட்கள்தான் ஆகிறது. ஆனால் ‘இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை.. வழக்கம் போல் போதைப்பொருள் புழங்குகிறது.. காவல்துறையினர் பொதுமக்களை மீது அத்துமீறுகிறார்கள்.. குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்திருக்கிறது’ என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன.

சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், அமீர் போன்றவர்கள் தவெக அரசுக்கும், விஜய்க்கும் எதிராக பேசினார்கள்...

அந்த கூட்டத்தில் பேசிய அமீர் ‘ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு கூட்டம் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஜனநாயகன் படத்தை காப்பாற்ற ஒரு கூட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.. மக்கள் பிரச்சனையை பற்றி பேச வேண்டியவர்கள் தியேட்டரில் இருக்கிறார்கள்’ என்று பேசினார். அதேபோல் பா.ரஞ்சித் பேசிய போது ‘சேலத்தில் அம்பேத்கர் சிலை 6 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கிறது.. விஜய் அம்பேத்கரை தன் கொள்கை தலைவரா ஏற்று கொண்டவர்தானே.. அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? அவர் நினைத்தால் அந்த சிலையை திறந்து வைக்க முடியாதா?..  தற்போது எட்டு தலித் அமைச்சர்கள் இருந்தும் அவர்கள் எங்கள் பிரதிநிதிகளாக இல்லை.. அவர்கள் தலித் பிரச்சினைகளை பேசுவதில்லை’ என கூறியிருந்தார்..

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் ரஞ்சித் ‘ நின்றாலும் குனிந்தாலும் குறை கண்டுபிடிக்கும் மாமியார் போல இது தவறு அது தவறு என்று தொடர்ந்து குறை கண்டுபிடிப்பதில் எந்த பயனும் இல்லை.. அவர்கள் இப்போதுதான் வந்திருக்கிறார்கள்.. 5, 10 அல்லது 20 முறை மாநிலத்தை ஆண்டவர்களிடம் நாம் இது போன்ற கேள்விகளை ஒருபோதும் கேட்டதில்லை.. விஜய் நிறைய வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.. அவர் அவற்றை நிறைவேற்றுவார் என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன்’ என கூறியுள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வன் படத்தில் நடித்திருந்தால் விஜய் இருக்கும் இடத்தில் ரஜினி இருப்பார் - சவுக்கு சங்கர்