1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govt annouced new plan for tasmac shops

டாஸ்மாக் மதுக்கடை பார்!.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!...

tasmac
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக டாஸ்மாக் தொடர்பான முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பதில் தவெக அரசு உறுதியாக இருக்கிறது.

டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல வருடங்களாகவே புகார் இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் அதை தடுப்பதில் சில நடைமுறை சிக்கலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் டாஸ்மாக்கில் கூட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் பணியிடை நீக்கம் மற்றும் அபராதம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில்தான் டாஸ்மாக் மதுக்கடை பார் தொடங்குவதற்கான விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை மதுக்கடையுடன் இணைந்து பார் தொடங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இனி 100 மீட்டர் தூரத்திற்குள் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய விதிமுறையால் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பார் நடத்தும் நடைமுறை மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. பார் தொடங்குவதற்கான குறைந்தபட்ச அளவு 15 சதுர மீட்டில் இருந்து 20 சென்டிமீட்டராக உயர்த்தப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கரப்பான்பூச்சியினர் போராட்டம் குறித்து அன்னா ஹசாரே.. என்ன இப்படி சொல்லிட்டாரு?