1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A summon send to former minister mr vijayabaskar

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை!

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை அடுத்து முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை செய்த பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அடுத்த கட்டுரையில்
தாய், மனைவிக்கு கோயில்