1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:21 IST)

டிவில்லியர்ஸ் அவுட் ஆனதைப் பார்த்து அவரின் மகனின் ரியாக்‌ஷன்!

நேற்று முன்தினம் பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே முக்கியமான போட்டி நடந்தது.

இந்த போட்டியில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஆர் சிபி அணி ஒரு கட்டத்தில் விக்கெட்களை இழக்க ஆரம்பித்தது. அப்போது முக்கியமானக் கட்டத்தில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏ பி டிவில்லியர்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அப்போது போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் மகன் ஏமாற்றத்தில் கையை உதற அது முன்னால் இருந்த சேரில் பட்டதால் ஏற்பட்ட வலியால் கையை உதறினார். இது வீடியோவாக இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.