1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:29 IST)

ஆர்யா-சாயிஷா தம்பதியின் மகள் பெயர் அறிவிப்பு!

பிரபல நடிகர் ஆர்யா, நடிகை சாய்ஷாவை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தற்போது பெயர் வைத்துள்ளனர் ஆர்யா சாயிஷா தம்பதியினர்.
 
அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆர்யா அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்தார் என்பது சமீபத்தில் வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்தது என்பது தெரிந்ததே. 
இந்த நிலையில் தற்போது அரண்மனை 3, எனிமி உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ள ஆர்யா தமிழ் திரைஉலகில் மீண்டும் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ஆர்யா - சாயிஷா தம்பதிகளின் பெண் குழந்தைக்கு நேற்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ’அரியனா’ என்பதுதான் அந்தப் பெயர். நேற்று உலகம் முழுவதும் மகள்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அதே தினத்தில் தனது மகளுக்கு நடிகர் ஆர்யா பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆர்யா-சாயிஷா தம்பதியின் மகள் பெயர் அறிவிப்பு!