வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:23 IST)

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை

நாடு முழுவதும் பள்ளிகளை பகுதி பகுதியாக திறக்க அரசுக்கு ஐசிஎம்ஆர் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் பள்ளிகளை பகுதி பகுதியாக திறக்க அரசுக்கு ஐசிஎம்ஆர் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 
 
பள்ளிகளில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பள்ளியில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதியானால் பள்ளிகளை மூட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.