தொடர்புடைய செய்திகள்
- உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
- அம்மா உணவகத்திற்கு 2 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு-!
- தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றார் மக்களவை செயலர்: என்ன காரணம்?
- வழக்கு விசாரணையில் ChatGPT செயலியை பயன்படுத்திய நீதிபதி..!
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பெண்ணுக்கு 2 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு..!
ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு 83 வயது முதியவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு 83 வயது முதியவர் ஒருவர் மைசூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதாவின் சட்டபூர்வமான வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் போயஸ் கார்டன் மாளிகை உள்பட ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு சட்டபூர்வமான உரிமையை அவர்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் 83 வயது வாசுதேவன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். மைசூரை சேர்ந்த இவர் தனது தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவியின் மகள் தான் ஜெயலலிதா என்றும், எனவே அவரது சொத்தில் 50% பங்கு வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
