உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனைப்படி, தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் கரூர் மேற்கு பகுதி செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வந்தது கொண்டாடும் வகையில் கரூர், கோவை, ஈரோடு சந்திப்பு சாலை முனியப்பன் கோவில் அருகில் அதிமுக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்பொழுது கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் முவை ஜெகதீசன், தனபால், சுரேஷ், பத்மா, அங்கு செந்தில், செல்வகுமார், ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.