செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (17:01 IST)

அம்மா உணவகத்திற்கு 2 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு-!

அம்மா உணவகத்திற்கு 2 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர்  பிரியா ராஜன்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013 ஆம் ஆண்டு  சென்னை மாநகராட்சி மற்றறும் தமிழகத்தில் உள்ள அனைத்து மா நகராட்சிகள் மூலமாக இயங்கும் மலிவு விலை உணவக திட்டத்ததை தொடங்கிவைத்தார்.

இதன்மூலம், ஏழை எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர் உள்ளிட்ட பலரும் குறைந்த விலையில் அம்மா உணவகத்தில் வந்து உணவு சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அம்மா உணவகத்திற்கு 2 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர்  பிரியா ராஜன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சென்னை  மாநகராட்சியில் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்குகின்றன. இதில், 3000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்தாண்டு அம்மா உணவகத்தின் பணியாளர்கள், ஊதியம், அரசின் பருப்பு, காய்கறி ஆகியவற்றின் கொள்முதல் என சுமார் ரூ.120 கோடி செலவு என்றும், ரூ.14 கோடி வரவு என்று கூறியுள்ளார்.

மேலும்,  அம்மா உணவகங்கள் மூடப்படவுள்ளதாக வதந்தி பரவிய நிலையில், சென்னையில்  அம்மா உணவகங்களுக்கு பட்ஜெட்டில் 2 மடங்கு  நிதி( ரூ.9.65) இதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.