வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (17:52 IST)

வழக்கு விசாரணையில் ChatGPT செயலியை பயன்படுத்திய நீதிபதி..!

ChatGPT என்ற செயலி தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி வருகிறது என்பதும் அனைத்து துறைகளிலும் இந்த செயலியை பயன்படுத்தும் முறை தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக வேலைகள் மிகவும் சுலபமாக முடிகிறது என்றாலும் பலர் வேலை இழந்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ChatGPT வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. 
இந்த நிலையில் ஜாமீன் வழக்கின் மீது முடிவெடுக்க ChatGPT செயலியை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் சிட்காரா என்பவர் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இதுகுறித்து அந்த நீதிபதி விளக்கம் அளித்த போது ChatGPT செயலியை பயன்படுத்தினாலும் வழக்கின் தன்மை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில்தான் இந்த வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ChatGPTயை நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் இன்னும் சில வருடங்களில் முழுக்க முழுக்க ChatGPTயை நீதிமன்றங்கள் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran