செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (17:33 IST)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பெண்ணுக்கு 2 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பெண்ணுக்கு இரண்டு நாட்கள் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் திருடியதாக ஈஸ்வரி என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆவணங்கள் நகைகள் உட்பட பல விலை உயர்ந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் காவல்துறையினர் அனுமதி கேட்டனர் 
 
இந்த மனு மீது விசாரணை இன்று நடைபெற்ற போது இரண்டு நாட்கள் காவலில் எடுத்து இருவரையும் விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva