முதல்வர் விஜய்யின் அடுத்த விசிட் திருச்சி.. தேதி அறிவிப்பு.. ரோட்ஷோவுக்கு திட்டம்...
முதலமைச்சர் விஜய் அவர்களின் திருச்சி வருகை தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியிலும் திருச்சி மக்கள் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நவம்பர் 20-ஆம் தேதி திருச்சியில் முடிவுற்ற பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கிடவும் அவர் திருச்சிக்கு வருகை தருகிறார்.
இந்த சிறப்புமிக்க பயணத்தின் போது, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 600 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன புதிய கட்டடத்தை முதலமைச்சர் விஜய் திறந்துவைக்கவுள்ளார். அத்துடன், அரசு சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'அண்ணன் சீர்' திட்டத்தையும் அவர் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும், விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் வகையில் அவர் பிரம்மாண்ட சாலை வலம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் யனாவத் அரவிந்த் தலைமையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் விஜய்யின் இந்த அதிரடித் திட்டங்கள் மற்றும் வருகையால் திருச்சி மாவட்டத் தவெகவினர் பெரும் எழுச்சியடைந்துள்ளனர்.

