1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. fir filed against biggboss muthukumaran in chennai

இன்ஸ்டா வாக்கிதா கொடுத்த புகார்!.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு...

vahitha
vahitha

பேச்சாளர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் முத்துக்குமரன். பிக்பாஸ் சீசன் 8வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில்தான், முத்துக்குமரன் தன்னிடம் நெருக்கமாக பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு அதன்பின் திருமணம் செய்ய மறுக்கிறார் என வாக்கிதா என்கிற பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் முத்துக்குமரனோ அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, அவரை அமைத்திப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாரே தவிர அவரின் புகாரை ஏற்கவில்லை. கடந்த பல நாட்களாகவே ‘நாம் முத்துக்குமரனை விட மாட்டேன்.. சட்டப்படியாக நடவடிக்கை எடுப்பேன்’ என தொடர்ந்து கூறி வந்த வாக்கிதா சில நாட்களுக்கு முன்பு சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் முத்துக்குமரன் மீது புகார் அளித்தார்..

இந்நிலையில், முத்துக்குமரன் மீது விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கல்யாணம் முடிஞ்சி அடுத்த நாளே பிரசவம்!.. புது மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண்...