அரையாண்டுத் தேர்வு விடுமுறை தினங்கள் அறிவிப்பு.. ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை...
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 2026–2027 கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 24, 2026 முதல் ஜனவரி 3, 2027 வரை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த கூடாது என்றும், விடுமுறை முடிந்து ஜனவரி 4, 2027 திங்கட்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என்றும் இயக்குநர்களின் இணைச் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கும் நாளன்றே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3-ஆம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்கி உரிய பதிவேடுகளில் மதிப்பெண்களை பதிவு செய்ய அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரையாண்டு விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்ற விதியை சில தனியார் பள்ளிகள் மீறுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், மாணவர்களின் ஓய்வு மற்றும் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

