1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Launches 'Vetri Magalir' Goat Rearing Scheme: Free Goats and 100 Percent Subsidy Worth Rs 109.75 Crore for 30,000 Rural Women

தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்! கிராமப்புற பெண்களுக்கு அடித்தது யோகம்..

ள இந்த அசத்தல் திட்டம் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெற்றி மகளிர் திட்டம்
கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 
 
இத்திட்டத்திற்காக ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 100 தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 30,000 பெண்கள் பயனடைவார்கள்.
 
ஒவ்வொரு பயனாளிக்கும் நூறு சதவீத மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. ஆடுகளின் விலை, அவற்றுக்கான இரண்டு வருட காப்பீடு, தீவனம் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான ஊக்கத்தொகை என அனைத்து
ச் செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்கிறது. 
 
கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு கொண்டுவந்துள்
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரூ.1.20 கோடி செலவில் மீனவர்களுக்கு படகு.. வட்டியை தமிழக அரசே கட்டும்.. அசல் மட்டும் கட்டினால் போதும்..