1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. balakrishnan post mortem report says injuries

ஓட்டுனர் பாலகிருஷ்ணன் மரணம் - உடற்கூராய்வில் வெளியன அதிர்ச்சி தகவல்கள்!..

driver
மதுரைக்கு அருகே உள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.ஆ னால் என் கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை என அவரின் மனைவி மறுத்தார்.

இந்த வாகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமை காவலர்கள் பழனிவேல் ராஜன் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பாலகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கையை வெளியாகியிருக்கிறது. அதில் பாலகிருஷ்ணனில் உடலில் ஐந்து இடங்களில் ரத்த காயம் இருப்பது தெரியவந்துள்ளது..

கழுத்தில் இரு பக்கங்களிலும் சாய்வான கயிற்று தடயங்கள் உள்ளன.. கழுத்தின் வலது பக்கத்தில் மூன்று சிறிய சிராய்ப்பு காயங்கள் நேர்கோட்டில் இருந்துள்ளன.. முதுகில் ஐந்து இடங்களில் நீல நிற ரத்தக் கசிவு காயங்கள் பதிவாகியுள்ளன. மூளை 1400 கிராம் எடையுடன் வீக்கமடைந்தும், இதயம் 358 கிராம் எடையுடன் சற்று பெரிதாகவும் இருந்துள்ளது.

நுரையீரல்களில் வீக்கம், ரத்தக் கசிவு புள்ளிகள் மற்றும் நுரை கலந்த திரவம் காணப்பட்டுள்ளது. ஆனாலும் ரசாயன பகுப்பாய்வு மற்றும் திசுவியல் பரிசோதனை முடிவுகளுக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானவுடன் அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பழனிச்சாமி இடத்தில் இருக்கவேண்டியது நயினார் நாகேந்திரன்தான் - வைகோ சொன்ன பிளாஷ்பேக்..