1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. we the leaders complaint against vanniyarsu

முதுமலை வனப்பகுதியில் வன்னியரசு.. எழுந்த சர்ச்சை.. புலிகள் ஆணையத்திடம் புகார்...

vanniyarasu
முதுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக ஆட்சியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அக்கட்சியின் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சராகியிருக்கிறார். தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்து அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில்தான், நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த 10ம் தேதி வன்னியரசு ஆய்வு நடத்தினார். அப்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் அவர் சென்றார்.  தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று அவர் ரீல்ஸ் எடுத்ததாக சொல்லப்படுகிறது..

அடர்ந்த வன பகுதி பகுதிக்குள் அவர் புலியை விரட்டி செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் ரிலீஸ் எடுக்க அமைச்சரை வனத்துறை எப்படி அனுமதித்தது எப்படி? என இயற்கை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும், வன்னியரசு மீது WE THE LEAERS அமைப்பின் நிர்வாகி விக்ரம் தேசிய புலிகள் ஆணையத்திடம் புகாரளித்துள்ளார். வன்னியரசுக்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமெரிக்கா மீண்டும் தவறிழைத்தால், எங்கள் படைகள் தக்க பதிலடி கொடுக்கும்.. ஈரான் எச்சரிக்கை..