1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. West Bengal CM mamtha warns to BJP

அந்த நாள் விரைவில் வரும்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

mamtha
அந்த நாள்விரைவில் வரும் என பாஜகவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அடிக்கடி மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது என்பதும் இரு கட்சிகளும் ஆவேசமாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று கூறியபோது இன்று பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு விசாரணை அமைப்புகளை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்
 
ஆனால் நாளை நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது இதே விசாரணை அமைப்புகள் உங்கள் வீட்டுக்குள் புகுந்து உங்கள் காதை பிடித்து வெளியே இழுத்து வரும் .அந்த நாள் விரைவில் வரும் என பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார் 
 
மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு பாஜக வினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
டிராஃபிக் சிக்னல் சிவப்பு விளக்குகளில் இதயம்: போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு