1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (16:58 IST)

அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான்: வானதி சீனிவாசன்

Vanathi
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள் தான் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கூறியுள்ளார். 
 
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டும் தான் தாய்மொழியில் படிக்காத மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றும் புதிய கல்விக் கொள்கையின் முதல் அடிப்படையே தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது தான் என்றும் ஆனால் அதனை ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்றும் தெரிவித்தார் 
 
அலுவல் மொழி இந்தி என்பது அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த விஷயம் என்று அது பாஜக கொண்டு வந்தது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள் தான் என பாஜக கூறி வருகிறது என்றும் பாஜக எந்த மொழியையும் கைவிடவில்லை என்றும் எந்த மொழியையும் தனியாக ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran