வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (17:17 IST)

பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! - செந்தில் பாலாஜி

Senthil Balaji
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இங்குள்ள பூத் எண்ணிக்கை கூட தெரியாது என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்தாண்டு  நடைபெற்றது. இதில், பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.  இவர் கரூர் அரவக் குறிச்சி தொகுதியில் பாஜகவுக்காகப் போட்டியிட்ட நிலையில், இதே தொகுதியில், செந்தில் பாலாஜியும் போட்டியிட்டார்.

அப்போது, செந்தில்பாலாஜிவை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட பல பிரிவுகளில் அரவக்குறீச்சி காவல் நிலையதில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பாஜக சட்டமன்றக் குழு தலைவர்  நயினார்  நாகேந்திரன் தலைமையில்  நடைபெற்ற ஆலோசக் கூட்டத்தில், அதிமுகவின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அடுக்கடுனான குற்றச்சாடுகள் கூறினார். இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில்,  ஆளுங்கட்சி பற்றியும், திமுக கட்சி பற்றியும், அண்ணாமலை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில்,  இன்று திமுக ஆட்சியின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தன் டிவிட்டர் பக்கத்தில், ‘’தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது!

68,019 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 66,000தான் உள்ளன என்பார்.

களமும் தெரியாது; தரவும் தெரியாது.

சமூக ஊடகத்தில் ‘படம்’ ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும்! ‘’எனப் பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj