1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (17:32 IST)

ராகுலுக்குப் போட்டியாக பாஜக தலைவர்கள் பாதயாத்திரை !

Rahul Gandhi
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமைக்கான பாதயாத்திரை சென்று வரும் நிலையில் இவருக்குப் போட்டியாக பாஜக தலைவர்கள் பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கர்நாடக மாநிலத்தில் அடுத்தாண்டு மேமாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளாது. தற்போதுள்ள முதல்வர் பசுவராஜ் தலைமையிலான  பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி  கர் நாடக மா நிலம் சாம்ராஜ்  நகரில் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கினார்.


தொடர்ந்து, மைசூர், துமகூரு வழியாக  நேற்று சித்ரதுர்காவில் பாதயாத்திரைப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கு தயாராகும் வண்ணமும், தொண்டர்களை தயார்படுத்தி, மக்களிடன் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கியோல், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசுவராஜ் பொம்மை  மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்  செய்யவுள்ளனர்.

Edited by Sinoj