1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Heart shape red signal in Bangalore

டிராஃபிக் சிக்னல் சிவப்பு விளக்குகளில் இதயம்: போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு

heart
டிராஃபிக் சிக்னல் சிவப்பு விளக்குகளில் இதயம்: போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு
டிராபிக் சிக்னலில் உள்ள சிகப்பு விளக்கில் இதயவடிவ ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பெங்களூர் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
பெங்களூரில் வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் 25-ம் தேதி வரை முக்கிய ட்ராபிக் சிக்னலில் உள்ள சிவப்பு விளக்குகள் இதய வடிவத்தில் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
இதயத்தின் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இதய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
 பெங்களூர் காவல்துறையின் இந்த சிறப்பு ஏற்பாட்டுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இதயத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தாயை கொடூரமாக கொன்ற மகன்