தொடர்புடைய செய்திகள்
- எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறைந்த உச்சநீதிமன்றம்.! விவிபாட் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி விமர்சனம்..!!
- வாட்ஸ் அப் மூலம் வழக்கின் விசாரணை விவரங்கள்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்..!
- விவிபேடுகளின் நம்பகத்தன்மை குறித்த வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
- வயநாடு தொகுதியில் பின் தங்குகிறார் ராகுல் காந்தி.. உள்ளூர் ஊடகத்தின் கருத்துக்கணிப்பு.!
- விவிபேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..! தேர்தலில் முறைகேடு ஆதாரம் இல்லை..!உச்சநீதிமன்றம்...
நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தேர்தலில் போட்டியிட தடையா?
நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளர் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக தகவல் வழியாக உள்ளது.
ஷிவ் கெரா என்ற எழுத்தாளர் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால்அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் ஒரு தொகுதியில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளர், அதே தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது.
மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
