வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (16:54 IST)

வயநாடு தொகுதியில் பின் தங்குகிறார் ராகுல் காந்தி.. உள்ளூர் ஊடகத்தின் கருத்துக்கணிப்பு.!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் பின்தங்கி இருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் உள்ள ஸ்டார் தொகுதி வயநாடு என்பதும் இங்குதான் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதும் தெரிந்தது. அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா என்பவர் போட்டியிடுகிறார் என்பதும் அதேபோல் பாஜக சார்பில் சுரேந்திரன் என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கு மூன்று முனை போட்டி இருந்தாலும் ராகுல் காந்தி மற்றும் ஆனி ராஜா ஆகிய இருவர் இடையே தான் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி சுமார் 7 லட்சம் வாக்குகள் பெற்று 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் அவர் வெற்றி பெறுவார் என்று தான் ஆரம்பகட்ட கருத்துக்கணிப்புகள் இருந்தன.

ஆனால் ஆனி ராஜா செய்து வரும் தீவிரமான பிரச்சாரம், முதலமைச்சர் பினராயி விஜயன் ராகுல் காந்தி மீது வைக்கும் நேரடி குற்றச்சாட்டு ஆகியவை காரணமாக ராகுல் காந்திக்கு வாக்கு சதவீதம் குறைந்து வருவதாகவும் தற்போது அவர் பின்னடைவில் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே தான் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva