வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2024 (13:02 IST)

ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்தல்..! அயன் படம் பாணியில் தங்கம் கடத்தியவர் கைது..!

Gold
துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ. 71 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர்,  மலேசியா,  துபாய்,  சார்ஜா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானங்கள் வந்து செல்கின்றன.  அவ்வாறு விமானங்களில் பயணம் மேற்கொண்டு வரும் பயணிகள் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது
 
இந்நிலையில் துபாயிலிருந்து,  திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம்  சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  சோதனையின் போது ஆண் பயணி ஒருவர் தனது ஆசனவாயில் பேஸ்ட் வடிவில் 3 பாக்கெட்டுகளில் ரூ.70.58 லட்சம் மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.


இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.