1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sunny leone condemned JNU attack

”யாரும் பாதிக்காத வகையில் தீர்வு காண வேண்டும்”.. சன்னி லியோன் வலியுறுத்தல்

சன்னி லியோன்
ஜே என் யு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சன்னி லியோன், “ஒருவரை ஒருவர் பாதிக்காத வகையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்

சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் ஜே என் யு மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில், “ஜே என் யு தாக்குதல் சம்பவம் மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களையும் அச்சப்படவைத்துள்ளது. வன்முறையை நிறுத்துமாறு நான் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பாதிக்காத வகையில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என கூறியுள்ளார்.
About Writer
Arun Prasath